திருப்போரூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம்.
திருப்போரூர் கந்தசாமி
திருப்போரூர் கந்தசாமி கோவில்
தொகுதி பெயர் : திருப்போரூர்
தொகுதி எண் : 33
அறிமுகம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருப்போரூம் ஒன்று.
எல்லை :
தற்போது சீரமைக்கப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதியில் ஏற்கெனவே செங்கல்பட்டு தொகுதியில் இருந்த திருக்கழுகுன்றம் பேரூராட்சி, திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் பாதி கிராமங்கள், மாமல்லபுரம் பேரூராட்சி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே திருப்போரூர் தொகுதியில் இருந்த மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் செங்கல்பட்டு சட்டபேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே திருப்போரூர் தொகுதியில், திருப்போரூர் பேரூராட்சி, திருக்கழுகுன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகளும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் உள்ள 50 ஊராட்சிகளும், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகள் உள்ளிட்ட 79 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கியது திருப்போரூர் தொகுதி.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள்: 3
திருப்போரூர் } 18 வார்டுகள்
மாமல்லபுரம் } 15 வார்டுகள்
திருக்கழுகுன்றம் } 18 வார்டுகள்
ஊராட்சிகள்: 79
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் (50): ஆலத்தூர், ஆமூர், அருங்குன்றம், அனுமந்தபுரம், இல்லலூர், கேஆர் குப்பம், காரணை, கரும்பாக்கம், காயார், கொளத்தூர், கொட்டமேடு, கோவளம், குன்னம்பட்டு, கேளம்பாக்கம், கீழூர், மடையத்தூர், மயிலை, மாம்பாக்கம், மானாமதி, மேலையூர், மேலகோட்டையூர், முள்ளிபாக்கம், முட்டுக்காடு, நாவலூர், நெல்லிகுப்பம், வடநென்மேலி, ஒரகடம், படூர், பையனூர், பனங்காட்டுப்பாக்கம், பட்டிபுலம், பெரிய இரும்பேடு, பெரியவிப்பேடு, பெருந்தண்டலம், பொன்மார், புதுப்பாக்கம்,செம்பாக்கம், சிறுசேரி, சிறுங்குன்றம், சிறுதாவூர், சோனலூர், தாழம்பூர், தண்டலம், தண்டரை, தையூர், திருநிலை, திருவிடந்தை, வடநென்மேலி, வெளிச்சி, வெம்பேடு.
திருக்கழுகுன்றம் ஊராட்சி (29): நென்மேலி, புல்லேரி, மேலேரிப்பாக்கம், திருமணி, சோகண்டி, தாழம்பேடு, மோசிவாக்கம், மணப்பாக்கம், பி.வி.களத்தூர், ஆனூர், சாலூர், பொன்பதிர்கூடம், நரப்பாக்கம், தத்தலூர், அம்மணம்பாக்கம், நடுவக்கரை, முள்ளிகொளத்தூர், பட்டிக்காடு, எச்சூர், குழிப்பாந்தண்டலம், வடகடம்பாடி, கடம்பாடி, நல்லூர், நத்தம்கரியச்சேரி, நெய்குப்பி, குன்னத்தூர், மணமை, எடையூர், சட்ராஸ்.
வாக்காளர்கள் :
ஆண் பெண் மொத்தம்
94,554 91,998 1,86,552
வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 225
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
தங்கராஜ், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் 9443833942.